சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் எப்போதுமே மாஸ் ஆகவும் ஆக்சன் ஆகவும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து விடும். இதனாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் ஆக்சன் காட்சிகளில் பணியாற்றும் சண்டை இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள் தங்களது உயிரைக் கொடுத்து பணியாற்றுவார்கள்.
அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் பிரமிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து பாராட்டுக்களுமே ஆக்சன் இயக்குனராக பணியாற்றிய ஸ்டன் சிவா மற்றும் அவர்கள் மகன் கெவின் குமார் ஆகியோரைத்தான் சேரும்.
படத்தில் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தனக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பை அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்த்திற்கும் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஸ்டன் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோருடனும் தனது மகன்கள் கெவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமார் ஆகியோருடனும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மிகப்பெரிய போஸ்டர்களாக மாற்றி சென்னை நகரெங்கும் ஒட்டி தனது நன்றியை வெளிப்படுத்தி உள்ளார்.