தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் கூட வருடத்திற்கு ஒரு படம் என்கிற கணக்கில் தான் நடித்து வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக நடித்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய வரும் லால்சலாம் என்கிற படத்திலும் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படிப்பிடிப்பையும் சமீபத்தில் நிறைவு செய்தார் ரஜினி.
இதற்கு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஜெயிலர், லால் சலாம் படங்களை முடித்த கையேடு சற்று ஓய்வெடுக்க விரும்பிய ரஜினிகாந்த் தற்போது மாலத்தீவுக்கு சென்று ரிலாக்ஸாக பொழுதுபோக்கி வருகிறார்.
இதுவரை முன்னெப்போதும் பார்த்திராத ஷார்ட்ஸ் போன்ற உடை அணிந்து அங்கே உள்ள கடற்கரையில் ரஜினிகாந்த் நடந்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
வழக்கமாக தனது மனைவி அல்லது மகள்கள் ஆகியோருடன் வெளியூர் பயணங்கள் கிளம்பும் ரஜினிகாந்த் இந்த முறை தனியாக மாலத்தீவுக்கு கிளம்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.