V4UMEDIA
HomeNewsKollywoodபுதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்த ஹிருதயம் கூட்டணி

புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்த ஹிருதயம் கூட்டணி

மலையாளத்தில் இளம் இயக்குனர்களில் அதிக அளவில் ரசிகர்களை கவரும் விதமாக படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வினீத் சீனிவாசன். இவரும் ஒரு நடிகராக மாறி பிஸியாக நடித்து வந்தாலும் சீரான இடைவெளியில் படங்களையும் இயக்கி வருகிறார்.

கடந்த வருடம் மோகன்லால் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் ஹிருதயம் என்கிற படத்தை இயக்கியிருந்தார் வினித் சீனிவாசன் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 50 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த நிலையில் இதே டீம் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக கைகோர்த்துள்ளனர். படத்திற்கு வருஷங்களுக்கு சேஷம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக பிரணவ், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க முக்கிய வேடத்தில் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் நடிக்கிறார்.

மேலும் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், மின்னல் முரளி இயக்குனர் பசில் ஜோசப் இவர்களுடன்  வினீத் சீனிவாசனும் நடிகர் நிவின்பாலியும் கூட சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஷான் ரகுமான் இசையமைக்கிறார். ஹிருதயம் படத்தை தயாரித்த விகாஸ் சுப்பிரமணியன் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

Most Popular

Recent Comments