V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனர் ஹரியுடன் 6-வது முறையாக கைகோர்த்த தேவிஸ்ரீ பிரசாத்

இயக்குனர் ஹரியுடன் 6-வது முறையாக கைகோர்த்த தேவிஸ்ரீ பிரசாத்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த வருடம் அருண்விஜய் நடிப்பில் அருவா என்கிற படம் வெளியானது. ஹரியின் முந்தைய படங்களைப் போல அல்லாமல் கதையும் விறுவிறுப்பும் குறைவாகவே இருந்ததால் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்க தவறியது.

இந்த நிலையில் தற்போது தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷாலை ஹீரோவாக வைத்து படம் இயக்கி வருகிறார் இயக்குனர் ஹரி. விஷாலின் 34 ஆவது படமாக இது உருவாகி வருகிறது

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே உருவான இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்றவை. இப்போதும் தொலைக்காட்சிகளில் அடிக்கடி இந்த படங்கள் ஒளிபரப்பினாலும் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த புதிய படத்தில் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன் இயக்குனர் ஹரி இயக்கிய ஆறு, வேங்கை, சிங்கம், சிங்கம் 2, சாமி ஸ்கொயர் என ஐந்து படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய தேவிஸ்ரீ பிரசாத் தற்போது ஆறாவது முறையாக அவருடன் கைகோர்த்துள்ளார்.

இதற்கு முந்தைய இவர்களது கூட்டணியில் வெளியான பாடல்கள் பல சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அந்த வகையில் இந்த படத்திற்கும் தரமான சம்பவத்தை டிஎஸ்பியிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments