சந்தானம் நகைச்சுவை நடிகர் என்கிற நிலையில் இருந்து சோலோ ஹீரோவாக மாறி நடிக்க ஆரம்பித்த பின்னர் அவரது திரையுலக பயணத்தில் அவருக்கு கை கொடுத்து திருப்புமுனையாக அமைந்த பணம் என்றால் தில்லுக்கு துட்டு படம் தான்.
ஹாரர் கலந்த காமெடி படமாக உருவான இந்த படம் எப்போது பார்த்தாலும் சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் படமாக அமைந்தது. அதன்பிறகு ஒரு சில படங்களில் சறுக்கிய சந்தானம் மீண்டும் தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் ராம்பாலா தான் இயக்கி இருந்தார். இப்போது சந்தானத்துக்கு ஒரு முக்கியமான வெற்றி தேவைப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் உருவாகி உள்ளது.

ஆனால் இந்த படத்தை இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. முதல் இரண்டு பாகங்களைப் போல இந்த இந்த படமும் ரசிகர்களுக்கு திருப்திகரமாக அமையும் என்பதற்கு இந்த டிரைலர் உத்தரவாதம் தருகிறது..

குறிப்பாக வழக்கம் போல சந்தானம் மற்றும் மொட்ட ராஜேந்திரன் கூட்டணியில் காமெடி களைகட்டும் என்பதும் தெரிகிறது. வரும் ஜூலை 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றும் அறிவித்துள்ளனர்.