நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை படம் குறித்தோ, பாடல்கள், டீசர் குறித்தோ எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
ஆனால் அவர்கள் மொத்த வருத்தத்தையும் போக்கும் விதமாக இந்த படத்தில் இருந்து காவலா இருக்கிற முதல் சிங்கிள் லிரிக்ஸ் வீடியோ பாடல் வெளியானது. இந்தப் பாடல் தற்போது பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
குறிப்பாக நடிகை தமன்னாவிற்கு அவரது திரையுலக பயணத்தில் பெருமை சேர்க்கும் விதமாக கிடைத்த முதல் தனிப்பாடலாக இதை கூறலாம். அந்த அளவிற்கு இந்த பாடலை இளைஞர்கள் எல்லோரும் இன்ஸ்டாவில் ரீல் செய்து போட்டு இன்னும் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த சிங்கிளுக்கான எதிர்பார்ப்பு தானாகவே எழுந்துள்ளது. இதுகுறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இது இது டைகரின் கட்டளை என்று தொடங்கும் இந்த இரண்டாவது பாடல் வரும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகவே இருக்கிறது.
முதல் பாடல் எப்படி தமன்னாவின் பெயர் சொல்லும் பாடலாக அமைந்ததோ, அதேபோல இந்த இரண்டாவது சிங்கிள் பாடலை பார்க்கும்போது இது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கான எனர்ஜி பாடல் என்பது தெளிவாகவே தெரிகிறது.