ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் கதாநாயகியாக ரிது வர்மா நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் சுனில், செல்வராகவன், அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான அதிருதா மாமா என்கிற பாடலை தமிழில் டி ராஜேந்தர் பாடியுள்ளார்.
இதே பாடலை தெலுங்கில் விஷால் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.