யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் குஷி. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்தான குஷி படத்தின் டைட்டில் தான் இந்த படத்திற்கும் வைத்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஹிருதயம் புகழ் பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியான நிலையில் தற்போது ஆராத்யா என்கிற இரண்டாவது சிங்கிள் வெளியாகி உள்ளது.
இந்த காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி போன்ற பரபரப்பான பாடகர்கள் பாடியுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘குஷி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது