விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் கொலை. விடியும் முன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகிகளாக ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஸ்கின் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது கிட்டத்தட்ட படத்தின் டைட்டிலை ஆய்வு செய்து வைத்தது போல கால் மணி நேரத்திற்கும் அதிகமாக கொலை குறித்து பல விஷயங்களை பேசி ஆச்சரியப்பட வைத்தார்.
அடுத்து பேசிய விஜய் ஆண்டனி மிஸ்கின்க்கு நன்றி தெரிவித்ததுடன், “ஒருவர் தன்னுடைய படம் இல்லை என்றாலும் கூட இன்னொருவரின் படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்போது அந்த படம் குறித்து பேசுவதற்காக எவ்வளவு விஷயங்களை அலசி ஆராய்ந்து அது குறித்து பேசுகிறார் என்றால் உண்மையிலேயே மிஸ்கின் மிகப்பெரிய மனிதர் தான் அவருக்கு எனது நன்றி” என்று கூறினார்