மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. அது மட்டுமல்ல நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷாவும் விஜய்யும் இணைந்து நடிக்கும் படமும் கூட. இந்த படத்தில் இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கி கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை ஒரே கட்டப்படிப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு மாறி மாறி நடைபெற்றது.

இந்த நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தில் தனக்கான காட்சிகள் முழுவதையும் நடித்துக் கொடுத்துவிட்டு லியோ குழுவினரிடம் இருந்து விடை பெற்றுள்ளார்.

இந்த தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளதுடன், இரண்டாவது முறையாக இந்த பயணத்தை சிறப்பாக மாற்றி அமைத்ததற்கு நன்றி அண்ணா என்று விஜய்க்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.