V4UMEDIA
HomeNewsKollywoodயு/ஏ சான்றிதழ் பெற்ற கிக் ; விரைவில் ரிலீசுக்கு தயார்

யு/ஏ சான்றிதழ் பெற்ற கிக் ; விரைவில் ரிலீசுக்கு தயார்

சந்தானம் நிறைய படங்களில் நடிப்பது போன்ற அறிவிப்புகளும் போஸ்டர்களும் வெளியாகி வருகின்றனவே தவிர அவரது படங்கள் சீரான இடைவெளிகளில் வெளியாகி வருகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித காரணங்களால் தாமதமாகி தேங்கி நிற்கிறது.

அந்த வகையில் சந்தானம் நடிப்பில் கிக், ஏஜென்ட் கண்ணாயிரம், வடக்குப்பட்டி ராமசாமி என கைவசம் படங்கள் இருந்தாலும் அவை எப்போது ரிலீஸ் ஆகின்றன, இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதா என்பது குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை,

இந்த நிலையில் சந்தானம் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் என்பவரின் இயக்கத்தில் நடித்து வந்த கிக் என்கிற திரைப்பட தற்போது சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தொடர்ந்து ரிலீசாக இருப்பதால் சந்தானத்தின் படத்தை இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து எதிர்பார்க்கலாம் என்றே தெரிகிறது

Most Popular

Recent Comments