வெப் சீரிஸ்கள் என்றாலே திரில்லர், ஹாரர், க்ரைம் என்று ஆகிவிட்ட நிலையில் மெல்லிய, குடும்பப் பாங்கான, பெண்களை கவரக்கூடிய வெப் சீரிஸ்களும் எடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக தற்போது உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் ஸ்வீட் காரம் காபி.
மூன்று தலைமுறை பெண்களுக்கு இடையே நடக்கும் கதையாக உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் இன்று முதல் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. இதில் நடிகை லட்சுமி, மதுபாலா மற்றும் நிவேதிதா ஆகியோர் மூன்று தலைமுறை கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர்.
சுந்தரி ( லட்சுமி), காவேரி ( மது), நிவேதிதா ( சாந்தி) என பாட்டி, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் ஆணாதிக்கத்துடன் தினமும் போராடுகிறார்கள். சுந்தரியின் வழக்கத்திற்கு மாறான ஆசைகள்… தன்னையே அதிகமாக நேசிக்கும் காவேரி… தொழில் மீது பேரார்வத்தை செலுத்தும் நிவேதிதா.. என எதுவாக இருந்தாலும் சரி இவை மூன்றுமே நம்முடைய சமூகத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால், நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்து ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்த மூன்று பெண்களின் எளிய தேவைகள் சமூகத்தால் நிராகரிக்கப்படும் போது, அவர்கள் உண்மையிலேயே தகுதியான சுதந்திரத்தையும்.. இடத்தையும் வழங்குவதற்கு நம் உலகம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதனை இந்த வெப் சீரிஸ் அழகாக வெளிப்படுத்தி உள்ளது
இதயத்தை வருடும் இந்த இணைய தொடரை, இயக்குநர்கள் விஜய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர் தமிழில் உருவாகி உள்ள இந்த வெப் சீரிஸ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இன்று வெளியாகி உள்ளது