தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தம்பி ராமையா. மைனா படத்தில் நடித்ததில் இருந்து ஒரு குணச்சித்திர நடிகராகவும் மாறினார்.

இவரும் சமுத்திரக்கனியும் ஒரே அலை வரிசையில் பயணிக்கும் நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். சமுத்திரக்கனி இயக்கும் பல படங்களில் தம்பி ராமையா முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பார். அதேபோல தம்பி ராமையாவும் சமுத்திரக்கனியும் கூட வேறு இயக்குனர்களின் படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தம்பி ராமையா கதை வசனம் எழுதி இசையமைத்து வரும் ராஜா கிளி என்கிற படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்து வருகிறார். சில படங்களில் கதாநாயகனாக நடித்த தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

இந்த படத்தை மாநாடு பட தயாரிப்பாளராக சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் டிரைலர், இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது..





















