அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார்.
இவர்களுடன் கன்னட நடிகர் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் சிவராஜ் குமார் நாயகன் தனுஷ் ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தை டைனமோ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சந்தீப் கிஷன் தற்போது இந்த படத்தை தனக்கான காட்சிகளை நிறைவு செய்து விடை பெற்றுள்ளார். இந்த படம் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.