ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ருத்ரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் இல்லை என்கிற கணக்கில் ஓரளவு டீசன்டான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுளக்ஸ் ஆகிய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
குறிப்பாக இதில் சந்திரமுகி 2 திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரே நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவரது சிஷ்யனான ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி 2 படத்திற்கான வரவேற்பிலும் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என உன்னிப்பாக கவனித்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த படத்தில் கங்கனா ரணவத் கதாநாயகியாக நடிக்க மற்றும் சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்ளிட்ட இன்னும் சில கதாநாயகிகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மிக முக்கியமான வேடத்தில் வடிவேலும் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பேசும் பணியை துவங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது என்பது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.