விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராக இருக்கும் படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயகனாகவும் எஸ்.ஜே சூர்யா வில்லனாகவும் நடித்துவரும் இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார்,
இந்த படத்தின் கதைக்கலமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது படத்தின் போஸ்டர்கள் மூலம் பளிச்சென தெரிகிறது. ஆக்சனை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படம் ஏற்கனவே ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டு இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினத்தில் வெளியாகும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அன்றைய தினம் தான் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கலாம்.