மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.. அந்தப்படம் கொடுத்த புகழை தொடர்ந்து தமிழிலும் நுழைந்த அவர் விஜய் சேதுபதியுடன் இரண்டு படங்களில் ஜோடியாகவும் நடித்தார்
இன்னொரு பக்கம் தெலுங்கு, கன்னடத்திலும் படவாய்ப்புகள் தேடி வந்தன, ஆனாலும் தமிழில் கடைசியாக இவர் சசிகுமாருடன் இணைந்து நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

கடந்த இரண்டு வருடங்களில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது இவரது திரையுலக பயணம் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

அந்த வகையில் தமிழில் விஜய் நடித்து வரும் லியோ மற்றும் அருள்நிதி நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கிறார் மடோனா. இன்னொரு பக்கம் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக பத்மினி என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படம் வரும் ஜூலை-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து மலையாளத்தில் ஐடென்டி என்கிற படத்தில் நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதனால் இந்த வருடத்தில் இருந்து சீரான இடைவெளியில் மடோனாவின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.