தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி தாணு. தனது படங்களைப் போன்று தனது பட வெளியீட்டிலும் விளம்பரங்களிலும் பிரமாண்டம் காட்ட கூடியவர்.
தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களை தயாரித்து வரும் கலைப்புலி தாணு கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்கிற படத்தை தயாரித்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக பிரபல நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் மற்றும் பான் இந்திய படமாக இது உருவாகும் என தெரிகிறது.
ராஜமவுலி இயக்கிய நான் ஈ என்கிற படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே நெருக்கமானவர் நடிகர் கிச்சா சுதீப். அதைத்தொடர்ந்து அவரது படங்கள் கன்னடத்தில் உருவானாலும் அவை தமிழில் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் கலைப்புலி தாணு இயக்கத்தில் உருவாகும் கிச்சா சுதீப்பின் 46வது படம் குறித்து எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. இந்த நிலையில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் புரோமோ அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
முழுக்க முழுக்க ஆக்சனுக்கு உத்தரவாதம் தரும் படமாக இது உருவாகிறது என்பது புரோமோவை பார்க்கும்போதே தெரிகிறது.