நடிகர் ஆதி தமிழ் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் நடித்து வருகிறார். கடந்த வருடம் நடிகை நிக்கி கல்ராணியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இந்த வருடத்தில் அவரது முதல் படமாக பாட்னர் என்கிற திரைப்படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘பாட்னர்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த கதை பற்றி பேசிய நடிகர் ஆதி கூறும்போது, “பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.. ரூம் மேட்ஸ்… மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக்கொள்வார்கள். குட் நைட். சொல்லி தூங்குகிறார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் பெஸ்ட் பிரண்ட்… அழகான ஃபிகராக மாறிவிடுகிறார். என படத்தின் இயக்குனர் ஒன்லைன் சொன்னதுமே இது வித்தியாசமாக இருக்கிறதே என ஒப்புக்கொண்டேன்.
பிரண்டு ஃபிகராக மாறுவது எப்படி ? பின் விளைவு என்ன? என்பது தான் படத்தின் மொத்த கதையும்” என்று கூறியுள்ளார் நடிகர் ஆதி. அந்த வகையில் கேட்பதற்கே கலகலப்பாக இருக்கும் இந்த கதை ஆதிக்கும் ஹன்சிகாவுக்கும் ஒரு வெற்றிகரமான ரீ என்ட்ரி படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.