நடிகர் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. இந்த படம் தான் தனது திரையுலக பயணத்தில் கடைசி படம் என்று ஏற்கனவே கூறி வந்தார் நாயகன் உதயநிதி.
அந்த வகையில் அவர் திரையுலகிலிருந்து திருப்தியாக ஓய்வு பெரும் விதமாக இந்த படம் இருக்கிறது என்று அவர் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜின் வழக்கமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தாலும் இது வேறு விதமான ஒரு பிரச்சினையை பேசியுள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் வணிகரீதியாக இந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்கிற சந்தோஷத்தில் இருக்கும் தயாரிப்பாளர் தரப்பு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை சந்தித்து கேக் வெட்டி இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதுமட்டுமல்ல இந்த படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு இப்படி ஒரு அற்புதமான படத்தை தந்ததற்காக மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் உதயநிதி.
இந்த காரை மாரி செல்வராஜின் வீட்டிற்கே தேடி சென்று உதயநிதியும் ரெட் ஜெயின்ஸ் நிர்வாகத் தயாரிப்பாளர் செண்பக மூர்த்தியும் அவரிடம் வழங்கியுள்ளனர்.