சமீப காலங்களில் ஜாதி மற்றும் மதம் ஆகியவற்றை சினிமாவில் தூக்கிப் பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் ஜாதி மதம் பற்றிய ஒரு ஜாலியான படமாக ராயர் பரம்பரை படம் உருவாகி உள்ளது என கூறியுள்ளார் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆனந்தராஜ்.
இயக்குனர் டி ராம்ராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாகவும் கிருத்திகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
முக்கிய வேடங்களில் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் ஆனந்தராஜ் பேசும்போது, “இந்தப்படம் சிறிய படம் இல்லை, ஒரு நல்ல பெரிய படம். தயாரிப்பாளர் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார், இந்தப் படம் ஜாதி மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம், யாரையும் தாழ்த்தி பேசாத ஒரு நல்ல படம், படத்தில் பல காமெடி கட்சிகளை எடுத்து வைத்துள்ளார் இயக்குநர்” என்று கூறியுள்ளார்.