பாலிவுட் வரை அதிகம் தேடப்படும் ஒளிப்பதிவாளராக வலம்வரும் நட்டி நட்ராஜ் இன்னொரு பக்கம் சதுரங்க வேட்டை என்கிற படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் பிரபலமாகி தொடர்ந்து கதாநாயகனாக, வில்லனாக நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசுரன் என்கிற படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக புலனாய்வு பத்திரிகையாளராக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
இதை அடுத்து அவர் நடித்துள்ள இன்ஃபினிட்டி என்கிற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வரும் ஜூலை ஏழாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சாய் கார்த்திக் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படமும் ஒரு துப்பறியும் படமாக உருவாகிறது என்பதை இதன் போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது. இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் தெரிகிறது.