இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஸ்டைலிஷ் ஆன ஆக்சன் கலந்த காதல் படங்களை மட்டுமல்ல அழகான காதல் பாடல்களை தனி ஆல்பமாகவும் கவித்துவத்துடன் எடுக்கவும் தெரியும். அந்த வகையில் தற்போது அவர் தனது ஒன்றாக என்கிற நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ள வீடியோ ஆல்பம் தான் முத்தப் பிச்சை.
இந்தப் பாடலை இசையமைத்து, தயாரித்து, கருத்துருவாக்கம் செய்து இயக்கியதன் மூலம் ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக மாறியுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.
வெற்றிப் படமான ’பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொடுத்த சந்தோஷ் மற்றும் திறமையான ஊர்மிளா கிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பாடலில் நடித்துள்ளனர்.
பாடலுக்கு விஷ்ணு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்க, குமார் கங்கப்பன் கலையை கவனித்துள்ளார். இதுமட்டுமல்லாது, பிருந்தாவின் நடன அமைப்புடன் ஆண்டனியின் எடிட்டிங் இந்தப் பாடலை மேலும் மெருகூட்டியுள்ளது.
ஜூன் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் இசை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒருமித்த பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.