வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷ் நடித்துவரும் படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் சார்பட்டா பரம்பரை புகழ் வேம்புலி ஜான் கொக்கைன் மற்றும் சந்திப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கியுள்ளன. தீபாவளிக்கு இந்த படம் வெளியாக உள்ளது என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை அம்சத்தில் இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில் அதை உறுதிப்படுத்துவது போன்று தனுஷ் ஒரு போர்க்களத்தில் பழமை வாய்ந்த ஒரு துப்பாக்கியுடன் இருப்பது போன்று இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இதில் தனுஷின் கெட்டப்பை பார்க்கும்போது ஹே ராம் படத்தில் நடித்த கமலின் கெட்ட ப் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.