தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும், தேடப்படும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்தான் ரவி கே.சந்திரன். இயக்குனர் ஷங்கர், மணிரத்தினம், ஏ.ஆர் முருகதாஸ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களின் தனது மிகப்பெரிய பங்களிப்பை தந்து இன்றும் பிஸியான முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் இவரது மகன் சந்தான கிருஷ்ணனுக்கும் மனிணி மிஸ்ரா என்பவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இயக்குனர் மணிரத்தினம் அவரது மனைவி சுகாசிநியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதேபோன்று நடிகர் கார்த்தி, இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர் முருகதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.