V4UMEDIA
HomeNewsKollywoodவிநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் சந்திரமுகி 2

விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் சந்திரமுகி 2

தமிழ் சினிமாவில் ஜெயிலர், லியோ ஆகிய படங்களுக்கு அடுத்ததாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது சந்திரமுகி 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் வாசுவே இந்த படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க முக்கிய வேடங்களில் வடிவேலு, ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகிகளாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

Most Popular

Recent Comments