நடிகர் துல்கர் சல்மான் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மலையாள திரை உலகில் மட்டுமே பயணித்து வந்தார். அதன்பிறகு கடந்த 10 வருடங்களாக தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நுழைந்து தென்னிந்திய நடிகராகவே மாறிவிட்டார். இந்தியிலும் கூட மூன்று படங்கள் நடித்து விட்டார்.

கடந்த வருத்தம் தெலுங்கில் அவர் நடித்த சீதா ராமம் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் அவர் நடித்து வரும் கிங் ஆப் கோதா என்கிற திரைப்படம் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் ஆவார். இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இரண்டு மணி நேரத்திற்குள் இரண்டு மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது.

இந்த டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் ‘தி கிங்’ (துல்கர் சல்மான்) வருவதைப் பார்க்கும்போது, நம் மொத்த கவனமும் அவர் மேல் குவிகிறது. மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாக வசீகரிக்கும் தோற்றத்தில் மிரட்டுகிறார் துல்கர் சல்மான். இந்த படம் பான் இந்திய படமாக வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது.