சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு முன்பே துவங்கப்படுவதாக சொல்லப்பட்ட இந்த படம், தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது

சமீபத்தில் கொடைக்கானலில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் சூர்யாவுடன் இணைந்து பங்கு பெற்ற பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த வருடம் ஆஸ்கர் விருதும் இந்த பாடலுக்கு கிடைத்தது.

அப்படிப்பட்ட பாடலுக்கு நடனம் அமைத்த இயக்குனர் பிரேம் ரக்ஷித் தான் இந்தப் பாடலுக்கும் நடனம் அமைத்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திஷா பதானி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.