குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற, ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களாக இயக்கியவர் இயக்குனர் ராஜு முருகன். இதைத்தொடர்ந்து தற்போது கமர்சியல் ஏரியாவுக்குள் நுழைந்து கார்த்தி நடித்து வரும் ஜப்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இது கார்த்தியின் 25வது படமாக தயாராகி வருகிறது.. இந்த படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டிய தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அதை உறுதி செய்துள்ளதுடன் ஜப்பான் படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில விடுபட்ட காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டி இருக்கின்றது.
இந்த படம் வரும் தீபாவளி பண்டிகையில் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்பட உள்ளது
இந்த படம் வரும் தீபாவளி பண்டிகையில் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்பட உள்ளது