கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுனரான சர்மிளா என்பவர் தான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டார். அந்த பேருந்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பயணித்தபோது நடத்துனருக்கும் சர்மிளாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சர்மிளா நீக்கப்பட்டார் என சொல்லப்படுகிறது.
அதே சமயம் கனிமொழி இந்த பேருந்தில் பயணித்ததால். அவருடன் சர்மிளா நெருக்கமாக பழகியதால். அரசியல் காரணங்களுக்காக அவர் விலக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சர்மிளாவின் புதிய வேலைக்கான விஷயங்களை தான் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் கமல், சர்மிளா மற்றும் அவரது குடும்பத்தாரை சென்னைக்கு வரவழைத்து விலை உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்து அதை வைத்து கால் டாக்ஸி போன்று ஒரு நிறுவனத்தை உருவாக்கி வாழ்க்கையில் முன்னேறும் விதமாக உற்சாகப்படுத்தியுள்ளார்.
தன்னால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உதவி செய்வதாக உறுதி அளித்துள்ள நிலையில் அதை நிறைவேற்றுவதற்குள்ளாகவே கமல் முந்திக்கொண்டு இப்படி அந்த பெண்ணுக்கு உதவி செய்திருப்பது ஒரு பக்கம் பாராட்டுகளை பெற்றாலும் ஒரு பக்கம் ஏற்கனவே அவர் கோவை தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் தோற்றதால் அடுத்த முறை வெற்றி பெறுவதற்காக இதுபோன்று செய்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
எதுவாக இருந்தாலும் கமல் செய்தது ஒரு நல்ல செயல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.