தமிழ் சினிமாவில் அவ்வப்போது சாதனைக்கு என சில படங்கள் எடுக்கப்படுவது உண்டு. பார்த்திபன் ஒரே ஆளாக நடித்த ஒத்த செருப்பு போன்ற சில படங்கள் சாதனைக்காக எடுக்கப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளன. அந்த வகையில் தற்போது கலைஞர் நகர் என்கிற படம் 23 மணி நேரத்திற்கு ஏழு நிமிடங்கள் முன்னதாக மொத்த படமும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.

பிதா’’ என்ற திரைப்படத்தை 23.23 மணி நேரம் இயக்கிய இயக்குனர் சுகன் குமார் தான் தற்போது கலைஞர் நகர்’’ என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் அடைவதற்கு 7 நிமிடத்திற்கு முன்பாகவே, அதாவது 22.53 மணி நேரத்திற்குள் முடித்து சாதனை படைத்துள்ளார்.

சுகன் குமார் இயக்கத்தில் ப்ரஜின், ப்ரியங்கா, லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.