V4UMEDIA
HomeNewsKollywoodஇயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் இயற்கை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ; வசந்த் ரவி பிரமிப்பு

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் இயற்கை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ; வசந்த் ரவி பிரமிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வசந்த் ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வரை இரண்டு மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்த பிரமிப்பில் இருந்து இன்னும் விலகாமல் இருக்கிறார் வசந்த் ரவி.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பில் தனக்கு கொடுக்கப்படும் வசன பேப்பரை வாங்கி ஒரு முறைக்கு பலமுறை தன் மனதிற்குள் வசனங்களை உள்வாங்கி கொள்கிறார். காட்சியில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு தியானம் செய்யும் ஒரு மனிதர் போல காட்சி அளிக்கும் அவர் ஆக்சன் என்று சொன்னதும் ஆளே மாறிவிடுகிறார்.

படப்பிடிப்பு நடந்த நாட்களில் நான் அவரை மட்டுமே கவனித்துப் பார்த்ததில் பல பாடங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக அவர் இயற்கையிலேயே ரியலிஸ்டிக்காக நடிக்கும் ஒரு நடிகர் என்பது நன்றாகவே தெரிந்தது. காரணம் ஒரு கமர்சியல் படத்தில் ரியலிஸ்டிக்கான நடிப்பை வெளிப்படுத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை.. அதை சூப்பர் ஸ்டார் அழகாக செய்கிறார்” என்று தனது பிரமிப்பை வெளிப்படுத்தி உள்ளார் வசந்த் ரவி.

Most Popular

Recent Comments