பேட்ட, அதைத் தொடர்ந்து மாஸ்டர் என இரண்டு படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் கவனிக்கத்தக்க நடிகையாக மாறியவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் பிரபாஸ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார், இந்த படத்தின் கதை கேஜிஎப் பாணியில் கோலார் தங்க வயல் பின்னணியில் நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாயகன் விக்ரமின் தோற்றமே பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. மேலும் நடிகை மாளவிகா மோகனனும் அதேபோன்று ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தனது கதாபாத்திர தோற்றத்திற்காக தினசரி நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மேக்கப்பிற்கே நேரம் செலவாகிறது என்று கூறியுள்ள மாளவிகா மோகனன் தனக்கு மேக்கப் போடும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாயகன் விக்ரமின் தோற்றமே பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. மேலும் நடிகை மாளவிகா மோகனனும் அதேபோன்று ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது கதாபாத்திர தோற்றத்திற்காக தினசரி நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மேக்கப்பிற்கே நேரம் செலவாகிறது என்று கூறியுள்ள மாளவிகா மோகனன் தனக்கு மேக்கப் போடும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.