பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு படங்களிலேயே தமிழ் ரசிகர்களிடமும் தமிழ் திரையுலகத்திலும் கவனம் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இதைத்தொடர்ந்து அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை இயக்கி வந்தார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாஸில் இதில் வில்லனாக நடித்துள்ளார். இவற்றையெல்லாம் விட ஹைலைட்டாக நடிகர் வடிவேலு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் கார்டில் உதயநிதியின் பெயர் நான்காவதாக தான் இடம் பெறுகிறது என்கிற ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் மாமன்னன் என்றால் அதில் வடிவேலு தான் என்றும் அவர்தான் இந்த கதையை தாங்கி பிடிக்கிறார் என்றும் கூறி அவரது பெயரை முதலில் போடும்படி கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் உதயநிதி.

அடுத்தது இரண்டாவது இடத்திலாவது அவர் பெயர் வருமா என்றால் அதற்கு பதிலாக வில்லனாக நடித்துள்ள பஹத் பாஸில், மூன்றாவது இடத்தில் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பெயர்களே இடம்பெற வேண்டும் என்றும் கூறிவிட்டாராம் உதயநிதி.

அந்த வகையில் நான்காவதாக தான் டைட்டில் கார்டில் அவரது பெயர் இடம்பெறுகிறதாம். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு கூற அதை ஆமோதித்துள்ளார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.