சிலர் தங்களது படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமாக யோசித்து டைட்டில் வைப்பது வழக்கம். அப்படி ஒரு படம் தான் தற்போது தயாராகி வரும் இருளில் ராவணன். கைட்டலுக்கு ஏற்றபடி ராவண தேசத்தில் நடைபெறும் கிரைம் திரில்லர் படமாக தயாராகி வருகிறது.

இந்தப் படம் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் துசாந்த் தனது முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து அசத்த இருக்கிறார்.

பத்து என்றதுக்குள்ள, ரங்கூன் போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
மெமரீஸ், க் போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆற்றல், சிக்லேட்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். அப்பா, போராளி, நாடோடிகள், ஈசன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார். விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டர் இந்த படத்திற்கும் நடனம் அமைத்து வருகிறார்

படம் பற்றி இயக்குனர் A.V.S.சேதுபதி பகிர்ந்தவை…
முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் படமாக இருவாக்கியுள்ளோம். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது