கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சலி அதைத்தொடர்ந்து அங்காடி தெரு படம் மூலம் ரசிகர்கள் அனைவரும் அறிந்த நடிகையாக மாறினார்.

எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது ஐம்பதாவது படமாக உருவாகிறது ஈகை. தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படம் சென்னையில் படப்பிடிப்போடு துவங்கப்பட்டது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசு , புகழ் , அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு , கிருஷ்ண சந்தர் , காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம். இயக்கும் இந்த படம் சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது,

ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த “ஈகை”