Home News Kollywood சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு

சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் கூட அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் வெவ்வேறு விதத்தில் ஊடுருவி வருகிறது. தொலைக்காட்சிகளில் அடிக்கடி அந்த படம் ஒளிபரப்பாகி வருகிறது.

இது தவிர கன்னடத்தில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழிலும் சந்திரமுகி 2 படத்தை கடந்த வருடம் அறிவித்த இயக்குனர் பி.வாசு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அவரது சிஷ்யன் ராகவா லாரன்ஸ் இன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் வடிவேலு, ராதிகா, சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்திற்கு சூப்பர் ஹிட் இசையை கொடுத்திருந்தார் இசை அமைப்பாளர் வித்யாசாகர்

இந்த இரண்டாம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் புகழ் இசை அமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.