கன்னடத்தில் வெளியாகி பான் இந்தியா திரைப்படமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கேஜிஎஃப். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த யஷ் மட்டுமல்லாமல் அதில் வில்லனாக நடித்து நடிகர்கள் கூட பெரிய அளவில் பேசப்பட்டார்கள்.

இதில் வில்லன் கருடா ராம் ஏற்கனவே தமிழில் வில்லனாக நுழைந்து சில படங்களில் நடித்துவிட்டார். தொடர்ந்து நடித்தும் வருகிறார். இந்த நிலையில் கேஜிஎப் படத்தில் இன்னொரு வில்லனாக நடித்த அவினாஷ் என்பவரும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார் அவினாஷ். இது குறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் சரித்திர காலப்பகுதியில் வில்லனாக அவினாஷ் நடிப்பதாகவும் அவரது வில்லன் கெட்டப் கேஜிஎஃப் படத்தை விட கடும் மிரட்டலாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.