V4UMEDIA
HomeNewsKollywoodமைனஸ் 20 டிகிரி குளிரில் சட்டை அணியாமல் நடித்த விஜய்  

மைனஸ் 20 டிகிரி குளிரில் சட்டை அணியாமல் நடித்த விஜய்  

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் டைரக்சநில் இரண்டாவது முறையாக லியோ என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. அங்கே படப்பிடிப்பு முடிந்த சமயத்தில் அதுகுறித்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியானது.

அதை தொடர்ந்து தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் காஷ்மீரில் இந்த படத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு நடித்த விஜய்யின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து சிலாகித்து பேசியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகளில் மெல்லிய சட்டை அணிந்து கொண்டு கடுங்குளுரில் சண்டைக் காட்சிகளில் விஜய் நடித்துள்ளார். அப்போது அதே மெல்லிய சட்டை அணிந்தபடியே ஐஸ் கட்டியில் உருளும் காட்சிகளிலும் குளிரை பொருட்படுத்தாமல் நடித்துள்ளார் விஜய்.

அதுமட்டுமல்ல, ஒரு சில காட்சிகளில் அதுவும் மைனஸ் 20 டிகிரி குளிரில் மேல் சட்டை கூட அணியாமல் விஜய் நடித்துள்ளார் என்கிற தகவலையும் அவர் கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments