நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் மிகவும் அதிரடியாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க முக்கிய வேடங்களில் நடிகர் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், நடிகர் சுனில், மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்
தமிழில் இருந்து ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் விநாயகன் தற்போது தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடித்து வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிஸியாக நடித்து வருவதால் அதை முடித்துவிட்டு ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.