கடந்த வருடத்தில் ஆச்சார்யா, காட்பாதர், இந்த வருட துவக்கத்தில் வால்டர் வீரய்யா என இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து தனது படங்களை வெளியிட்டு வருகிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இதைத்தொடர்ந்து அவர் தற்போது போலா சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் அஜித் நடித்து வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் ரீமேக்காக தான் இந்த படம் உருவாகி வருகிறது. மெஹர் ரமேஷ் இயக்கிவரும் இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னாவும் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

தமிழில் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்படி பிரபல ஹீரோவுக்கு தங்கையாக நடிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தங்கையாக நடித்தவர்தான் கீர்த்தி சுரேஷ்.

அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாக வந்த வாய்ப்பை தவற விட கீர்த்தி சுரேஷ் விரும்பவில்லை. இந்த நிலையில் போளோ சங்கர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.