V4UMEDIA
HomeNewsKollywoodநீண்ட நாளைக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் வையாபுரி

நீண்ட நாளைக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் வையாபுரி

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வந்தவர் நடிகர் வையாபுரி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் வையாபுரி தான் அறிமுகமான காலகட்டங்களில் நடிகர் விஜய்யின் படங்களில் தொடர்ந்து தவறாமல் இடம் பிடித்து வந்தார்.

இதற்கு முன்னதாக துள்ளாத மனம் துள்ளும் பிரியமானவளே, திருப்பாச்சி, சச்சின், போக்கிரி, வில்லு, காவலன் உள்ளிட்ட பல படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார் வையாபுரி.

இந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார் வையாபுரி. சமீபத்தில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.

Most Popular

Recent Comments