V4UMEDIA
HomeNewsKollywoodவெளிவராமலேயே போன வீடியோ பாடல் ; வருத்தப்பட்ட மீனா

வெளிவராமலேயே போன வீடியோ பாடல் ; வருத்தப்பட்ட மீனா

நடிகை மீனா தமிழ் திரை உலகில் சமீபத்தில் தான் தனது 40 வருட பயணத்தை நிறைவு செய்தார். இதற்காக மிகப்பெரிய விழா எடுத்தும் கொண்டாடினார்கள். தற்போதும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மீனா நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ‘நீ போதும்’ என்கிற ஆல்பம் பாடல் வெளியானது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த பாடலை வெளியிட்டார் நடிகை மீனா.

அந்த நிகழ்வில் அவர் பேசும்போது “இந்த பாடலை வெளியிடும் அளவுக்கு நான் சரியான ஆளா என்று தெரியாது. ஆனால் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. புதியவர்களின் வருகையை எப்போதும் ஊக்குவிக்க நான் தயங்கியதே இல்லை. அதில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம், திருப்தி கிடைக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னால் நானும் சியான் விக்ரமும் காதலிசம் என்கிற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம். அந்த சூழலில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆல்பங்கள் வரவேற்பை பெற்று வந்தாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை எப்படி வெளியிடுவது, மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்கிற வழிவகை தெரியாததால் அது ரிலீசாகமலேயே போய்விட்டது.

ஆனால் இந்த ஜெனரேஷனில் ஆல்பம் பாடல் குறித்து எல்லோர்க்குமே தெரிந்துள்ளது. என்னால் செய்ய முடியாததை இன்னொருத்தர் செய்யும்போது அதை வெளியே தெரியப்படுத்த தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்” என்று கூறினார்

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் நிரஞ்சனினா அசோகன் நாயகியாக நடித்துள்ளார். வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். சுரேந்திரன் ஜோ எழுதியுள்ள இந்த பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். ரஷாந்த் அர்வின் இந்த ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார்.

Most Popular

Recent Comments