V4UMEDIA
HomeNewsKollywoodமறுபேச்சே கிடையாது ; பிரியா பவானி சங்கர் ஹிட் லிஸ்டில் உள்ள மூன்று இயக்குனர்கள்

மறுபேச்சே கிடையாது ; பிரியா பவானி சங்கர் ஹிட் லிஸ்டில் உள்ள மூன்று இயக்குனர்கள்

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் இன்னும் விஜய், அஜித் எனும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்து உள்ள நடிகர்கள் அனைவரின் படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த இரண்டு மாதங்களில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகி விட்டன. இந்த நிலையில் தற்போது எஸ்.ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பொம்மை திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் கூறும்போது மூன்று இயக்குனர்களிடம் நான் கதையே கேட்காமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

அவர்கள் யார் என்றால் மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், பொம்மை படத்தின் இயக்குனர் ராதா மோகன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகிய மூவர்தான் என்று கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Most Popular

Recent Comments