Home News Kollywood ஆச்சரியப்பட வைக்கும் மாமன்னன் டிரைலர்

ஆச்சரியப்பட வைக்கும் மாமன்னன் டிரைலர்

பரியேறும் பெருமாள், கர்ணன் என ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து இவர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள மாமன்னன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 29ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது மாரி செல்வராஜின் முந்தைய இரண்டு படங்களைப் போலவே இந்த படமும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பை ஈடு கட்டும் விதமாகவே இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்த டிரைலர் கொடுத்திருக்கிறது.

குறிப்பாக பஹத் பாசிலின் வில்லத்தனமும் வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பும் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட்களாக இருக்கும் என்பதுடன் கீர்த்தி சுரேஷின் அதிரடி நடிப்பும் ரசிகர்களால் பேசப்படும் என்பதையும் இந்த டிரைலர் சொல்லாமல் சொல்கிறது. பல மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரைலரை பார்த்து ரசித்து வருகின்றனர்