V4UMEDIA
HomeNewsKollywoodடெஸ்ட் படப்பிடிப்பை நிறைவு செய்த மாதவன்

டெஸ்ட் படப்பிடிப்பை நிறைவு செய்த மாதவன்

தமிழ் படம், இறுதிச்சுற்று உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்தவர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இந்த நிலையில் அவர் முதன் முதலாக டெஸ்ட் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்

இந்த படத்தில் மாதவன் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வந்தது இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்து விட்டது என நடிகர் மாதவன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த படப்பிடிப்பில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது ஒரு அறிமுக இயக்குனரின் டைரக்சனில், மிகவும் திறமை வாய்ந்த ஒரு இயக்குனரின் டைரக்சனில் நல்ல சக நடிகர்களுடன் இந்த படத்தின் நடித்தது நிறைவாக இருந்தது என்று கூறியுள்ளார் மாதவன்.

Most Popular

Recent Comments