நடிகர்கள் பெரும்பாலும் நடிப்பதையும் தாண்டி வேறு பல தொழில்களில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் ஒரு சில ஹீரோக்கள் தங்களது சினிமா சார்ந்த துறையை மையப்படுத்திய தொழில்களிலேயே முதலீடு செய்வது வழக்கம்.

அப்படி தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது தனக்கு சொந்தமாக ஏ ஏ ஏ என்கிற பெயரில் மிகப்பெரிய திரையரங்கு ஒன்றை ஹைதராபாத்தில் கட்டி உள்ளார். தென்னிந்தியாவில் முதன்முதலாக உருவாகியுள்ள எல் இ டி திரையரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரையரங்கு திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டு தனது புதிய திரையரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த திரையரங்கில் இன்று வெளியாகி உள்ள பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அல்லு அர்ஜுனனின் தந்தை அல்லு அரவிந்த் சினிமா தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் ஆஹா என்கிற ஓடிடி தளத்தில் உரிமையாளராகவும் இருக்கும் நிலையில் அவரது மகன் அல்லு அர்ஜுனும் திரை உலகில் ஒரு புதிய தொழிலை ஆரம்பித்து இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.