V4UMEDIA
HomeNewsKollywoodபொம்மைக் காதலில் எஸ்.ஜே சூர்யா வெற்றி பெறுவாரா ?

பொம்மைக் காதலில் எஸ்.ஜே சூர்யா வெற்றி பெறுவாரா ?

இயக்குனரான எஸ் ஜே சூர்யா திரை உலகில் நுழைந்ததே ஒரு நடிகனாக ஆக வேண்டும் என்றுதான். கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கடந்த சில வருடங்களாக ஹீரோவாகவும் வில்லனாகவும் என இவரது நடிப்பு பயணம் பிசியாக தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக மாநாடு படத்தில் நாயகந சிம்புவை விட வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா அதிகப்படியாக கைதட்டலை அள்ளினார். தொடர்ந்து அவரது படங்கள் சீரான இடைவெளியில் வெளியாக வரும் நிலையில் அடுத்ததாக வரும் ஜூன் 16ஆம் தேதி அவர் நடித்துள்ள பொம்மை என்கிற படம் வெளியாகிறது.

உணர்வு பூர்வமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன இயக்குனர் ராதா மோகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே சூர்யாவே இந்த படத்தை தயாரித்து உள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மான்ஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் இது.

இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தன.

இந்த நிகழ்வில் நடிகர் எஸ்ஜே சூர்யா பேசும்போது, ‘த்திரிக்கையாளர் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தை வெளியிட முடிவு செய்தேன், நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் காதல் கதையே வித்தியாசமாக இருக்கும். இயக்குநர் ராதா மோகன் சாருக்கு தான் அந்த பெருமை சேரும். பிரியா பவானி சங்கர் படத்தில் பொம்மையாக நடித்துள்ளார், ஆனால் நிஜத்தில் அவர் பார்ப்பதற்கும் பொம்மை தான் அவ்வளவு அழகு. சாந்தினி ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரமும் சிறப்பாக வந்துள்ளது. யுவன் சாரின் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. படப்பிடிப்பின் பாதியிலேயே கொரானா வந்துவிட்டது, ஆனாலும் அது படத்திற்கு உதவியாகத்தான் இருந்தது. படத்தின் பின்னணி இசைக்காகவே படத்தைப் பார்க்கலாம் நான் அதற்கு உறுதி அளிக்கிறேன்.

இயக்குநர் ராதா மோகன் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார், இந்த படத்தின் காட்சிகள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன், இந்த படம் உணர்வுகளின் அடிப்படையில் உருவான படம், இந்தப் படத்தை மக்களிடம் கொடுத்து விடுகிறேன்” என்று கூறினார்.

இயக்குநர் ராதா மோகன் பேசும்போது, “நான் சில விஷயங்களைப் பேச வேண்டும் என்று நினைத்தேன் அதை அனைவரும் பேசி விட்டனர், இந்தப்படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்துள்ளது, எஸ் ஜே சூர்யாவிடம் முதலில் கதையைச் சொல்லி விட்டு தயாரிப்பாளரைத் தேட ஆரம்பித்தேன், ஆனால் சில நாட்கள் கழித்து அவரே தயாரிப்பதாக கூறினார் அப்படித்தான் இந்தப்படம் தொடங்கியது.

அவரும் இயக்குநர் என்பதால், அவ்வப்போது சில விஷயங்கள் சொல்வார் அது எனக்கு உதவியாக இருக்கும். இந்தக் குழுவிற்கு நான் நன்றி சொல்ல மாட்டேன் ஏனென்றால் இன்னும் பல படங்கள் இவர்களுடன் இணைந்து பணி புரிய போகிறேன். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. think music சந்தோஷ் அவர்களுக்கு நன்றி, பாடல்களைக் கேட்டதும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார், மொத்தத்தில் படம் அழகாக வந்துள்ளது” என்றார்

Most Popular

Recent Comments