இந்த வருட துவக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் டாக் ஆப் த டவுன் ஆக இருப்பவர் நடிகர் சரத்குமார் என்று தாராளமாக சொல்லலாம். காரணம் கடந்த ஜனவரி மாதத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் அவளது தந்தையாக மிக முக்கிய வேடத்தில் நடித்து இருந்த சரத்குமார். அந்தவிதமாக இந்த வருட பயணத்தை வாரிசு படத்துடன் துவக்கினார்
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/06/2por-thozhil-1.jpg)
அதைத் தொடர்ந்து சமீபகாலமாக அவர் நடித்தது கஸ்டடி, போர் தொழில் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் சரத்குமாருக்கு மிகப்பெரிய பெயரையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/06/the-smile-man-1-1024x683.jpg)
இதைத் தொடர்ந்து தற்போது இன்னும் 15 படங்களுக்கு மேல் சரத்குமார் நடிப்பில் உருவாகி வருகின்றன. அதில் அவரது 150 வது படமாக உருவாகி வரும் படம் தி ஸ்மைல் மேன். இந்த படத்தை மெமரிஸ் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஷாம் மற்றும் பிரவீன் இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/06/the-smile-man-2-768x1024.jpg)
இனியா, சிஜா ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் கலந்து படமாக இது உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.