இயக்குனர் சுசீந்திரன் ஒரு பக்கம் தயாரிப்பாளராக மனோஜ் கே பாரதி இயக்குனராக அறிமுகமாகும் மார்கழி திங்கள் என்கிற படத்தை தயாரித்து வருகிறார். அதுமட்டும் அல்ல அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் ஏற்கனவே விஜய் ஆண்டனியை வைத்து அவர் வள்ளிமயில் என்கிற படத்தையும் இயக்கி வந்தார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி காயமடைந்து சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருந்ததால் சுசீந்திரனின் வள்ளிமயில் படப்பிடிப்பும் தள்ளிப்போனது.

இந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது இதைத்தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்,கொடைக்கானல், சிறுமலை,பழநி,மதுரை,திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், தம்பிராமையா, GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்

1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா த்ரில்லராக வள்ளி மயில் திரைப்படம் உருவாகிறது